பழநி வைகாசி விசாக திருவிழா கோலாகலம்!
ADDED :4140 days ago
பழநி: முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சன்னதி திறக்கப்பட்டது. டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கம் சார்பில், பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மலைக்கோயிலின் மூலவர் ஞானதண்டாயுத பாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களில் பலரும் பால்குடங்கள் எடுத்து வந்தனர். விழாவையொட்டி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷனில் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயிலின் இலவச தரிசன பாதையில் பல மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.