குருவித்துறை குருபகவான் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்!
ADDED :4140 days ago
குருவித்துறை : குருவித்துறை குருபகவான் கோயிலில் நாளை குருபெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்கியது. இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன்பு சுயம்புவாக குருபகவான் எழுந்தருளியுள்ளார். இந்தாண்டு ஜூன் 13 வெள்ளிக்கிழமை மாலை 6.03 மணிக்கு மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார்.அதையொட்டி அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகாரபூஜையாக லட்சார்ச்சனை நேற்று துவங்கியது. பட்டர் ரங்கநாதன், ஸ்ரீதர்சாஸ்திரி வேதம் முழங்க குருபகவானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. ஊராட்சி தலைவர் கர்ணன், துணைத்தலைவர் பன்னீர், ஊராட்சி செயலர் மந்தையன் உட்பட பலர் பங்கேற்றனர். நாளை மதியம் 1 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜன் செய்திருந்தனர்.