திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1 hours ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இங்கு, காலை 7:00 மணிக்கு கோ பூஜை, சங்கல்ப பூஜை, 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகபூஜை துவங்கியது. காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதி, கடாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாங்கல்யதானம், வாரணமாயிரம் வைபவம் நடந்தது. உற்சவ பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.