திருப்பதியில் காற்றில் பறக்கும் தகடுகள்: பக்தர்கள் அச்சம்!
ADDED :4142 days ago
திருப்பதி: திருமலைக்கு நடந்து செல்லும், அலிபிரி பாதாளு மண்டபத்தில், நிழலுக்காக, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அமைத்திருந்த, நிழற்பந்தலில் உள்ள தகடுகள், காற்றில் பறப்பதால், பாத யாத்திரை பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருமலைக்கு நடந்து செல்லும், அலிபிரி பாதயாத்திரை மார்க்கம் அருகில், பாதாளு மண்டபம் உள்ளது. இங்கு கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க, தேவஸ்தானம், தற்காலிக நிழற்பந்தல் அமைத்தது. ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், நிழற்பந்தலில் உள்ள இரும்புத் தகடுகள், காற்றில் பறக்கின்றன. இதனால், இவ்வழியே நடந்து செல்லும் பக்தர்கள், தகடு தாக்கி காயமடையும் அபாயம் உள்ளது. வரும் மழைகாலத்திலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, நிழற்பந்தல் தேவை என்பதால், தேவஸ்தானம், பக்தர்கள் நலன் கருதி, நிரந்தர பந்தல் அமைக்க வேண்டும்.