உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி முனியப்பன் கோவில் விழா!

தர்மபுரி முனியப்பன் கோவில் விழா!

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பழைய தர்மபுரி ஏரிக்கரையில் கோட்டை முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், திருவிழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு, கோட்டை முனியப்பன் கோவில் விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, முனியப்பனுக்கு பழைய தர்மபுரியில் இருந்து பூஜை பொருட்கள் ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், முனியப்பனுக்கு முப்பூஜை வழிபாடும், சிறப்பு பூஜையும் நடந்தது. விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின், ஆடு, கோழிகள் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !