மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4159 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவானது ஜூன் 3ம் தேதி தொடங்கியது. ஜூன் 4-ல் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் சுவாமி சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை (சனிக்கிழமை) இரவில் தசாவதாரம் நடைபெறுகிறது.