உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் 10,008 திருவிளக்கு பூஜை!

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் 10,008 திருவிளக்கு பூஜை!

திருவள்ளூர்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமிக்கு, 108 பால்குட பூஜை, 10,008 விளக்கு பூஜை நடந்தது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 108 பால்குடங்களுடன், பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.பின், மூலவருக்கு, அபிஷேகம் நடந்தது. மாலை, 10,008 திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !