குன்றத்தில் மொட்டையரசு திருவிழா!
ADDED :4470 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நடந்தது. கோயிலில் ஜூன் 3ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்க விசாக திருவிழாவில் தினம் இரவு சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடந்தது. நேற்று பால்குட உற்சவம் நடந்தது. காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுõரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.