உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள்!

திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள்!

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருத்தணி ஒன்றியம், தலையாரிதாங்கல் கிராமத்தில் புதிதாக ஷீரடி சாய்பாபா கோவில் கட்டி, கடந்த 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் சத்தியநாராயண பூஜை நடந்தது.காலை 9:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சத்தியநாராயண பூஜையும், மாலை, 6:00 மணிக்கு உற்சவருக்கு பால், பன்னீர், நெய், இளநீர், தேன் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.இரவு, 7:00 மணிக்கு பல்லக்கில் உற்சவர் எழுந்தருளி கோவிலை, 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !