உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகத்தையொட்டி கருட சேவையில் பெருமாள்!

வைகாசி விசாகத்தையொட்டி கருட சேவையில் பெருமாள்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாச விசாக உற்சவம் நடந்தது.கடந்த 11ம் தேதி மாலை சீதேவி, பூதேவி, பெருமாள், உபயநாச்சியார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பெருமாளுக்கு மலரலங்காரம் செய்தனர். கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருள செய்து மண்டகப்படி, சேவை, சாற்றுமுறை பூஜைகள் செய்தனர். நாலாயிர திவ்யபிரபந்தம் பக்தர்களால் வாசிக்கப்பட்டது. நாம சங்கீர்த்தன பஜனைகளும் நடந்தன. கருட சேவையில் பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !