கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு!
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தாமூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது.இதையொட்டி கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினசரி இரவு 9.30 மணிக்கு மாரியம்மன், அய்யனார், கூத்தாண்டவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. 2ம் தேதி சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. தினசரி இரவு 9.30 மணிக்கு கூத்தாண்டவர் சுவாமி வீதியுலா நடந்தது. 16 நாட்களும் பாரதம் படித்தல் நிகழ்ச்சி நடந்தது.11ம் தேதி காலை 9 மணிக்கு கூத்தாண்டவர் கோவிலில் இருந்து சுவாமி தேர் வீதியுலா நடந்தது. பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிப்பட்டனர். மாலை 6.30 மணிக்கு தேர் கோவிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் படையலிட்டும், தீபாரதனை செய்தனர். நத்தாமூர், கிளியூர், அத்திப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று 13ம் தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கூத்தாண்டவருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.