விழுப்புரம் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!
ADDED :4229 days ago
விழுப்புரம் : விழுப்புரம் ரங்கநாதன் ரோடில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி பூஜை நடந்தது.விழுப்புரம் ரங்கநாதன் ரோடில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது.பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி விழாவையொட்டி, திரளான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.