வியாக்ரபுரிஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா!
ADDED :4230 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரில் உள்ள பிரணவ வியாக்ரபுரிஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரில் உள்ளது சிறப்பு வாய்ந்த பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமான விளங்கும் இக்கோவிலில் தனி சன்னதியில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவானுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவு பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.