அரியூர் கிராமத்தில் மிளகாய் சாந்து அபிஷேகம்!
ADDED :4134 days ago
திருபுவனை : புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அரியூர் கிராமத்தில் ஜீவன் முக்தர் குருசாமி அம்மையார் ஜீவ சமாதியில், பவுர்ணமியை முன்னிட்டு, மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.அம்மையார் சிலைக்கு நல்லெண்ணை, எலுமிச்சை பழம், விபதி, சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அலங்காரத்துடன் அம்மையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்திரசேகரன், துளசி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.