சூரமங்கலம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா!
ADDED :4132 days ago
நெட்டப்பாக்கம் : சூரமங்கலம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது. நெட்டப்பாக்கம் சூரமங்கலம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. கடந்த 11ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, பெரியசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.