மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் குருபெயர்ச்சி விழா!
ADDED :4132 days ago
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது. மூங்கில்துறைப்பட்டு பாலமுருகன் ஆலயத் தின் வளாகத்தில் அமைந் துள்ள முகிலேஷ்வரருக் கும், ஆலை வளாகத்தில் உள்ள தட்சணாமூர்த்தி, கடுவனூரில் உள்ள சிவன் கோவில்களிலும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து மகா தீபாரா தனை மற்றும் பரிகார அர்ச்சனை நடந்தது.
*முருக்கேரி: முருக்கேரி அடுத்த முன்னூர் பிரகந்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குருபெயர்ச்சி பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் கடந்த 13ம் தேதி மாலை குரு பெயர்ச்சியொட்டி விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தப்பட்டது. குரு பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.