உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டேரிப்பட்டு கோவில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

கூட்டேரிப்பட்டு கோவில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

மயிலம் : மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டில் ரங்கநாயகி சமேத பள்ளி கொண்ட பெருமாள் திருக்கோவில் புதியதாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. பள்ளி கொண்ட பெருமாள் சிலை ஒரே கல்லில் வடிவமைத்துள்ளனர். சுவாமி சிலையை கடந்த 6ம் தேதி கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவிலில் ராஜகோபுரம், கோவில் வளாத்தில் புதியதாக ஆண்டாள் சன்னதியும், கருடாழ்வார் புதிய சிலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.கோவில் திருப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் பக்தர்கள் நன்கொடை தொகையை ஸ்ரீரங்கநாயகி சமேத பள்ளி கொண்ட பெருமாள் கைங்கர்ய அறக்கட்டளை என்ற பெயரில் செக் அல்லது பணமாக அனுப்பலாம். வங்கி கணக்கில் பணமாக செலுத்துபவர்கள் எஸ்.பி.ஐ., மயிலம் கிளை கணக்கு எண்: 32818882226 மூலம் பணமாக செலுத்தலாம். கோவில் நிர்வாகத்தினரை 93450 39810, 99436 48278 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, திருப்பணிகள் குறித்த விபரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !