துன்பம் மறக்க...
ADDED :4126 days ago
மகான் ஒருவரை சந்தித்த ஒருவன், சுவாமி, துன்பங்களை மறக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். நன்மை செய். யாருக்காவது உதவி செய். உன்னிடம் உதவி பெற்றவர்கள், நன்றி சொல்லும்போது அவர்களின் முகத்தைப் பார்க்கும்போது உன் துன்பங்கள் ஓடிப்போகும்! என்றார் அவர்.