பாகூர் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4123 days ago
பாகூர்: பாகூர் திரவுபதியம்மன் கோவிலில், திரவுபதி–அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பாகூர் திரவுபதியம்மன் கோவில், தீ மீதி திரு விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி அரக்கு மாளிகை எரித்தல், 15ம் தேதி பக்காசூரன் வதம் செய்தல் நிகழ்ச்சி நடந் தது. நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு திரவுபதி–அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வரும் 20ம் தேதி மாலை 6.00 மணிக்கு தீ மிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் அமிர்தலிங்கம், செயலாளர் தங்கராசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.