திருமணத் தடை நீக்கும் புற்று!
ADDED :4226 days ago
சத்தியமங்கலம் அருகில் ஏலூரில் உள்ள மந்திராலயத்தில் புற்று ஒன்று காட்சியளிக்கிறது. இந்தப் புற்றில் ஒரு கருநாகம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் புற்றுக்கு நெய் விளக்கேற்றியும், பாலபிஷேகம் செய்வித்தும் பக்தர்கள் வணங்குகின்றனர். திருமணமாகாத பெண்கள் ஒன்பது முறை இந்தப் புற்றை வலம் வந்து வணங்கினால் சில வாரங்களில் திருமணத் தடை அகன்று, நல்ல வரன் அமைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.