கைலாசநாதர் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :4178 days ago
ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், நேற்று, செயல் அலுவலர் ராஜாராம் தலைமையில், ஏழு உண்டில்கள் திறக்கப்பட்டது. ஆலய அர்ச்சகர்கள் உமாபதி, தட்சிணாமூர்த்தி, பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசு ஆகியவை, எண்ணப்பட்டது. அதில், ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து 919 ரூபாய் இருந்தது. உண்டியல் பணத்தை, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அரசின் கணக்கில் கருவூலத்தில் செலுத்தினர்.