ஆதிவாலீஸ்வரர் கோவிலில் அகண்ட விளக்கு அமைப்பு!
ADDED :4177 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம், ஆதி வாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம், ஆதி வாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் புதிதாக வாலீ ஸ்வரர் சிலையும், அகண்ட அகல் விளக்கும் நிறுவி, அடுத்த மாதம் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.