திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :4177 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் நடன பாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூ ஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். நிர்வாக அலுவலர் நாகராஜன், கணக்கர் சரவணன், கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.