வடகஞ்சனூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :4177 days ago
விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வடகஞ்சனூர் ராமலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி தாலுகா வடகஞ்சனூரில் சவுந்தர்யநாயகி சமேத ராமலிங்கேஸ் வரர் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. இதையொட்டி ஸ்ரீவிநாயகர் கோபுரம், சுப்ரமணியர் கோபுரம், சுவாமி கோபுரம், அம்பாள் கோபுரம், ஸ்ரீசண் டிகேஸ்வரர் கோபுரம், பைரவர், நவகிரகங்கள் ஆகிய சன்னதிகள் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா நாளை(22ம் தேதி) காலை 8:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் நடக்கிறது. மயிலம் பொம்மபுரம் ஆதீன மடாதிபதி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.