நாகசக்தி அம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா!
பேரூர்: ஆலாந்துறை நாகசக்தி அம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது. சிறுவாணிரோடு- ஆலாந்துறை, பெருமாள் கார்டனில் நாகசக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நாகலிங்கேஸ்வரர், நாகசக்தி அம்மன் புற்றுக்கண் வடிவில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். மேலும், ராகு பகவான், கேது பகவான் தம்பதி சமேதராய் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். 18 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி விழா, இக்கோவிலில் இன்று காலை, 11.00 மணிக்கு துவங்குகிறது. ராகு துலாம் ராசியிலிருந்து, சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் கன்னிராசிக்கும், அதே நேரத்தில் கேது மேஷம் ராசியிலிருந்து ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறது. இதையடுத்து, கோவிலில், இன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை, ராகு, கேதுவுக்கு 108 கலச வேள்வி சிறப்பு வழிபாடு நடக்கிறது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் சிறப்பு பூஜை, பரிகார பூஜைகள் நடக்கின்றன.