உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வஜ்ஜிர தீர்த்த குளம் சீரமைக்கும் பணி தீவிரம்!

வஜ்ஜிர தீர்த்த குளம் சீரமைக்கும் பணி தீவிரம்!

ஸ்ரீபெரும்புதுார் : வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவில், வஜ்ஜிர தீர்த்த குளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லக்கோட்டை அமைந்துள்ளது. இங்கு, பழமையான சுப்ரமணி சுவாமி கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமி ஏழு அடி உயரத்தில், வள்ளி, தெய்வானை ஆகியோருடன், நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.இக்கோவில் அருகில் உள்ள வஜ்ஜிர தீர்த்த குளத்தில், பக்தர்கள் நீராடி, கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், குளம் சீரமைப்பு இன்றியும், படித்துறை சிதிலமடைந்ததால், பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். இந்த குளத்தை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி, திருக்கோவில் மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் செலவில் குளம் சீரமைக்க, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம், ஒப்புதல் பெறப்பட்டது.வஜ்ஜிர தீர்த்த குளக்கரை பலப்படுத்தப்பட்டும், படித்துறை அமைத்தும், குளம் சீரமைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், குளத்தை துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !