உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா

மாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்தணி : திருத்தணி அருகே, மாத்தம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட பாபிரெட்டிப்பள்ளி அருந்ததி காலனியில், மாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது.மூலவர் அம்மனுக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நேற்று, தீமிதி திருவிழாவை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !