உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழியில் அக்னிபுரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

சீர்காழியில் அக்னிபுரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெருவில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அரு ள்மிகு சௌந்தரநாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.மிகவும் பழமைவாய்ந்த இக்÷ காவில் சிதிலமடைந்திருந்தது. தற்போது கோயில் திருப்பனிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20 ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை 4 ம் கால பூஜைகள் முடிந்து 9மணிக்கு பூர்னாஹூதி மற்றும் மகாதீபாராதனை நட த்தப்பட்ட து.தொடர்ந்து 9:30மணிக்கு கடங்கள் புறப்பட்டு சுவாமி, அம்பாள்,வினாயகர், முருகள், தெட்சனாமூர்த்தி சன்னதி வி மானங்களை வந்தடைந்தது. தொடர்ந்து 10: 30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுர ம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீசண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தாமதமாக வந்ததால் 11: 22 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ராமு குருக்கள் தலைமையிலானோர் நட த்தி வைத்தனர். குறித்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை சட்டைநாதர்கோயில் கண்காணிப்பாளர் செந்தில் செய்திருந்தார். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியி ல் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !