சித்தலூர் கிராமத்தில் தேர் திருவிழா!
ADDED :4126 days ago
தியாகதுருகம்: சித்தலூர் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து வீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. கடந்த 23ம் தேதி மோடி எடுத்தல் நிகழ்ச்சி, நேற்று முன் தினம் காத்தவாரயன் ஆரியமாலா திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின், கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு உற்சவர் அம்மன் அலங்கரித்து திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.