சிவன்மலை கும்பாபிஷேகத்துக்காக பிரம்மாண்ட யாகசாலை அமைப்பு!
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், திருப்பணிகள் முடிந்து, வரும், நான்காம் தேதி, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள், 30ம் தேதி துவங்குகிறது. அன்று, விநாயகர் வழிபாடு நிகழ்ச்சியும், ஜூலை ஒன்றாம் தேதி கனி, கிழங்கு முலம் முருகப் பெருமானுக்கு சிறப்பு யாகமும், முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை, இரண்டாம் தேதி, மாலை, ஐந்து மணிக்கு, முருகப்பெருமானுக்கு, முதற்கால யாக வேள்வி துவங்குகிறது. முன்றாம் தேதி காலை, எட்டு மணிக்கு மேல், இரண்டாம் கால யாகவேள்வியும், மாலை, ஐந்து மணிக்கு முன்றாம் கால யாக வேள்வியும், தீபாராதனையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான, நான்காம் தேதி காலை, நான்கு மணியளவில், நான்காம் கால யாகவேள்வி துவக்கமும், ஆறு மணிக்கு மேல் பரிவார விமான தெய்வங்களுக்கு, கும்பாபிஷேக நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து, ஒன்பது மணிக்கு மேல் முருகப் பெருமானுக்கு கும்பாபிஷேக விழாவும் நடக்கிறது. இதற்காக, யாகசாலை வளாகம், பிரம் மாண்டமாக அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு காணப்படுகிறது.