உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகோவில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா!

பெரியகோவில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா!

தஞ்சாவூர்: பெரியகோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, நேற்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சையில் ராஜராஜசோழன் கட்டிய, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரியகோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பெரிய கோவிலில், ஓராண்டில் குறிப்பிட்ட நாட்களில், ராஜராஜன் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, பிரஹன் நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்தி விழா வெகுவிமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் உள்ளூர் பக்தர்கள் திரளாக பங்கேற்று, வராஹி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !