அமர்நாத் யாத்திரை: பஹல்காம் பாதை நாளை திறப்பு!
ADDED :4167 days ago
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான சாதுக்கள், மற்றும் சிவ பக்தர்கள் ஆட்டம், பஜனை பாடல்கள் பாடி சென்றவண்ணம் உள்ளனர். அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் பாரம்பரிய பாதையான பஹல்காம் பாதை நாளை (ஜூலை 2ம் தேதி) திறக்கப்படுகிறது. பஹல்காம் வழியாக அமர்நாத் கோவிலுக்குச் செல்ல 45 கி.மீ.தூரம் செல்ல வேண்டியிருக்கும். மத்திய காஷ்மீரில் உள்ள கந்தேர்பால் மாவட்டம் பால்பில் வழியாக அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் தூரம் 16 கி.மீ. ஆகும். இந்தப் பாதை ஏற்கனவே ஜூன் 28ம் தேதி திறக்கப்பட்டது. அதிக பனி காரணமாக பஹல்காம் பாதை திறக்கப்படவில்லை. கடந்த சில நாள்களாக இப்பாதையில் பனி சிறிது உருகத் தொடங்கி இருப்பதால் ஆளுநர் வோரா, இப்பாதையை ஜூலை 2ம் தேதி திறக்க முடிவு செய்திருப்பதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.