விநாயகரை செவ்வாயன்று வணங்குங்க!
ADDED :4120 days ago
பொதுவாக செவ்வாய்க்கிழமையை மக்கள் ஒதுக்குவதுண்டு. ஆனால் விநாயகருக்கு மிகவும் பிடித்த கிழமை செவ்வாய். பரத்வாஜ முனிவரின் பி ள்ளை அங்காரகன். செவ்வானம் போல சிவந்த நிறம் கொண்டதால் ‘செவ்வாய்’ என பெயர் பெற்றார். பரத்வாஜர் 64 கலைகளையும் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார். “ மகனே! முதல் கடவுளான விநாயகரை நோக்கி தவம் செய். அவரிடம் வேண்டிய வரம் பெற்று நல்வாழ்வு பெறுவாய்,” என வாழ்த்தி அனுப்பினார். தந்தை சொல்லை மந்திரமாக ஏற்ற செவ்வாயும் தவத்தில் ஈடுபட, விநாயகர் காட்சியளித்தார். அவரிடம், சதுர்த்தி திதியும், செவ்வாயும் இணைந்து வரும் நாட்களில், விநாயகரை வணங்குவோரின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வரம் பெற்றார். செவ்வாயான இன்று சதுர்த்தியும் இணைந்து இருப்பதால் விநாயகரைக் கும்பிட மறக்காதீர்கள்!