உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்தபெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது!

உலகளந்தபெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்  துவங்கின. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை யடுத்து நேற்று முன் தினம் யாக சாலை பூஜைகள் துவங்கின. இரண்டாம் நாளான நேற்று காலை 8 மணிக்கு புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம்,  ததுக்த ஹோமம், சாற்றுமறை நடந்தது. மாலை 6 மணிக்கு புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம், ததுக்த ஹோமம், பூர்ணாகுதி சாற்றுமறை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், அக்னி  ஆராதனம், கும்ப ஆராதனம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடாகி 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பா பிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !