நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
ADDED :4479 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ரிஷப கொடிக்கும் கொடிமரத்துக்கும் பூஜை செய்யப்பட்டது. பிறகு சிம்ம லக்னத்தில் ரிஷப கொடியேற்றப்பட்டது. இரவு சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி, சம்பந்தம், ஞானசம்பந்தம் குருக்கள் செய்தனர். இன்று முதல் தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 9ம் தேதி காலை ரத உற்சவமும், 12ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.