உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை முகூர்த்தக்கால் விழா!

கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை முகூர்த்தக்கால் விழா!

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், ஆடிப்பண்டிகை, ஜூலை, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்குவதை அடுத்து, முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட, எட்டு பட்டி மாரியம்மன் கோவில்கள் உட்பட, சேலம் மாநகர், மாவட்டத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆடிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஆடிப்பண்டிகை, ஜூலை, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஜூலை, 29ல் கம்பம் நடப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் பண்டிகை ஆக., 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஆகஸ்ட்,12ம் தேதி வரை, நடக்கும் ஆடிப் பண்டிகைக்கான முகூர்த்தக்கால் விழா நேற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

முகூர்த்தக்கால் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் நடப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகைக்கான முகூர்த்தக்கால் கம்பம் நடப்பட்டதை அடுத்து, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டைபுதுத் தெரு மாரியம்மன் கோவில் உட்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடிப்பண்டிகைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !