ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் மகா குருபூஜை!
ADDED :4118 days ago
சிதம்பரம்: பர்ண சாலை ஆத்மநாதர் கோவிலில் மாணிக்க வாசகர் மகா குருபூஜையையொட்டி மகா தீபாராதனை, திருவாசக வழிப்பாடு நடந்தது. இதனையொட்டி கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிவனடியார்களின் சிவபூஜை வழிபாட்டுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் துவங்கி பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மற்றும் திருவாசகம் முற்றோதல் நடந்தது. பின்னர், ஆத்மநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நமச்சிவாய மூர்த்தி மடம் டிரஸ்டி பசவராஜ், சங்கரநடராஜ தீட்சிதர் மற்றும் திருவாசக முற்றோதல் அன்பர்கள் செய்திருந்தனர்.