பழநி கோயில் நிரந்தர கட்டளைதாரர் கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயம்!
பழநி: பழநி கோயில் நிரந்தர கட்டளைதாரர் கட்டணத்தை ரூ.25ஆயிரமாக உயர்த்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ரூ,10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழநி கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அணையர் தனபால் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: பழநிகோயிலில் தேங்காய், வாழைப்பழங்கள் அடங்கிய அர்ச்சனை செட் விற்பனை விலை ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எள் பொட்டலம் ரூ.1க்கும், எண்ணெய்யுடன் சேர்த்து ரூ.3 க்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது.பழநிகோயில் காலிப்பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும். திருஆவினன்குடியில் அன்னதானம் விரைவில் வழங்கப்படும்.கோயில் தங்கதொட்டிலில் ஒருவயது வரை உள்ள குழந்தையை மட்டும் தாலாட்டலாம், என்பதை இரண்டு வயதாக மாற்றப்படும். நிரந்தர கட்டளைதாரர் கட்டணம் ரூ. 5 ஆயிரமாக இருந்ததை ரூ.25 ஆயிரமாக உயர்த்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதை ரூ.10 ஆயிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது ரோப்கார் அமைக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது.சண்முகா நதியை சுத்தம்செய்ய பொதுபணித்துறையினருக்கு ஒத்துழைப்பு தர இந்துசமய அறநிலையத்துறை தயாராக உள்ளது, என்றார். மதுரை மண்டல இணை ஆணையர் முத்துதியாகராஜன், பழநிகோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் உடனிருந்தனர்.