உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் யானைகளுக்கு முகாம்!

குருவாயூர் கோவில் யானைகளுக்கு முகாம்!

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், 59 யானைகளுக்கு, ஒரு மாத புத்துணர்வு முகாம் துவங்கியது.குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு, ஜீவதனம் எனும் ஆயுர்வேத புத்துணர்வு முகாம் துவங்கியது. யானைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், புத்துணர்வு அளிக்கவும் இம்முகாம் நடத்தப்படுகிறது.புன்னத்துார், கோட்டை பகவதி கோவில் வளாகத்தில் முகாம் நடந்து வருகிறது. உடல் நலக்குறைஉள்ள யானைகளுக்கு ஆயுர்வேதம் அல்லது அலோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் அரிசி, பயிறு, கொள்ளு, அஷ்டசூர்ணம், சவனப்பிராசம், மஞ்சள் துாள், உப்பு மற்று நவதானியங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இதற்காக தேவஸ்தானம், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !