உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்!

நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா மங்கள இசையுடன் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, சுவாமி சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. நேற்று துவங்கி பத்து நாட்கள் விழா நடைபெறும் 3 ம் தேதி சுவாமி, அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் உலா வருகின்றனர். எட்டாம் திருநாளில் நடராஜர், பச்சை சாத்தி எழுந்தருவார். அன்று மாலை தங்க சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்ட இந்த தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். ஆனித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.ஆண்டுதோறும் ஆனித்திருவிழாவின் போதுதான் நெல்லையில் அரசு சார்பில் பொருட்காட்சியும், பாளையங்கோட்டையில் மாநில அளவிலான புத்தக கண்காட்சியும் நடப்பதால் நெல்லை விழா கோலம் பூண்டுள்ளது. 1505ம் ஆண்டில்தான் முதன் முறையாக நெல்லையப்பர் கோயிலில் தேரோட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு நடப்பது 509வது ஆண்டு தேரோட்டமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !