பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம்
சிவகங்கை:காரைக்குடி, பாதரக்குடி முத்துமாரியம்மன், கணபதி, கல்யாண நவக்கிரக ஆலய கும்பாபிஷேகம், இன்று முதல் துவங்குகிறது. பாதரக்குடி முத்துமாரியம்மன், மகாகணபதி, கல்யாண நவக்கிரக ஆலயத்தில், இன்று மாலை 5:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன், விழா துவங்குகிறது. ஜூலை 5 முதல் 6ம் தேதி வரை, யாகசாலை பூஜைகள் நடைபெறும். விழாவின் 4ம் நாளான, ஜூலை 7, திங்களன்று, காலை 7:15 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன், கும்பாபிஷேகம் துவங்குகிறது. அதை தொடர்ந்து, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அன்று காலை 9:30 மணிக்கு, கடம் புறப்பாடு, அதை தொடர்ந்து, 10 மணிக்கு, கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 10:30 மணிக்கு, அனுக்கிரக விநாயகர், கல்யாண நவக்கிரகத்திற்கு மகா அபிஷேகம் நடைபெறும். விழாவை முன்னிட்டு, மங்கள இசை, நாதஸ்வரம், இன்னிசை பட்டிமன்றம், கருத்தரங்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் ஊரார்கள் செய்து வருகின்றனர்.