அம்சா மாரியம்மன் கோயில் செடல் உற்சவம் தேர் திருவிழா!
ADDED :4119 days ago
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை மேல்பாளையத்திலுள்ள அம்சா மாரியம்மன் கோயில் ஆட்டு செடல் உற்சவமும், தேர் திருவிழாவும் நடந்தது.இதையொட்டி கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி தினசரி இரவு நேரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு சக்தி கரகம் அழைத்தலுடன், மாலை 4 மணிக்கு ஆட்டு செடல் உற்சவம் நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு அம்சா மாரியம்மன் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்து, தேர் வீதியுலா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.