உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லிப்பாக்கம் கோவில் கும்பாபிஷேகம்!

பல்லிப்பாக்கம் கோவில் கும்பாபிஷேகம்!

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பல்லிப்பாக்கம் கிராம பழ மையான காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் புனரமைப்பு செய்து மகா கும்பாபி ஷேகம் நடந்தது.இதையொட்டி கடந்த 30ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 2 ம் தேதி நான்காம் கால பூஜைகள், பூர்ணாஹூதியை தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாங்காடு காமாட்சியம்மன் தலைமை அர்ச்சகர் ரவி சிவாச்சாரியார், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரதான ஸ்தானிகர் பாலாஜி வாமதேவ சிவாச்சாரியார், கூவம் தேவசேனாபதி குருக்கள், மாங்காடு கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் யாகசாலை பூஜைகளை செய்தனர். மாலை 5.30 மணிக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்லிப்பாக்கம் கைலாசநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். கோவில் சார்பில் பூரணகும்பம் அளிக்கபட்டது. கிராம மக்கள் விஜயேந்திரரை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்த பின், மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !