உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் : சோழவந்தான் சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று வருடாபிஷேகவிழா நடந்தது. பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்ய, ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து அருள்பெற்றனர். நேற்று மாலை புலிவாகனத்தில் சுவாமி சர்வ அலங்காரத்தில் ரதவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் கருவீரபத்திரன், பதஞ்சலி சில்க்ஸ் சுப்பிரமணியம், நிர்வாகிகள் சேகரன், தனசேகரன், காத்தமுத்து ஐயப்ப சேவா சங்க பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !