கோதண்டராமர் கோயிலில் ஆனித் தேரோட்டம் !
ADDED :4116 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரமோத்ஸவ விழாவையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஜூன் 27ல், அனுக்கை பூஜையுடன் விழா துவங்கியது. ஜூன் 28 முதல் ஜூலை 2ம் தேதி வரை சுவாமி சிம்ம, ஆஞ்சநேய, கருட உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜூலை 3ல், இரவு திருக்கல்யாணம், 5ல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று காலை 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அக்ரஹாரம், சிவன் கோயில் வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இன்று, காலை (ஜூலை 7) தீர்த்தவாரியுடன் பிரமோத்ஸவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.