ரமலான் சிந்தனைகள்: பெற்றவர்களைப் பாதுகாப்போம்!
சொர்க்கம் புக வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். இறைவன் கூறும் போது, “-நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்ல மாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம் உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை நீ ஒருபோதும் சுவர்க்கம் புக-மாட்டாய் என்று கூறும்” என்றான். ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நபிகளாரிடம், “நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை?” எனக் கேட்டார்.அதற்கு நபிகளார், “நேரம் தவறாமல் தொழுவது-” என்றார்கள்.
இதற்கு அடுத்த இடத்தை எந்தச் செயல் பிடிக்கிறது எனக் கேட்டபோது, “பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல்” என்றார்கள். இக்காலத்தில் பெற்றவர்களின் நிலை என்ன என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. பெற்றவர்களிடம் பணமிருந்தால் மட்டும் அவர்களை அண்டியிருப்பதும், அவர்களிடம் பணமில்லாவிட்டால், பிள்ளைகள் அவர்களை விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது. ஏன் இப்படி? பெற்றோரைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையல்லவா? இதை விட சிறந்த சிந்தனை வேறென்ன இருக்க முடியும்!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20