வன்னியபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதார தினம்!
ADDED :4115 days ago
புதுச்சேரி: வன்னியப்பெருமாள் கோவிலில், நரசிம்மருடன் காட்சிதரும் சக்கரத்தாழ்வார் அவதார தினவிழா நடந்தது. முதலியார்பேட்டை வன்னி யப்பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி உற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று மாலை நரசிம்மருடன் காட்சிதரும் சக்கரத்தாழ்வாரின் ‘அவதார தினம்’ கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் கும்பஸ்தாபனம் மற்றும் பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் நடந்தது.சுதர்தன ஹோமத்தை முன்னிட்டு, நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை, தேவஸ்தான உறுப்பினர்கள் செய்திருந்தனர்.