சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் பணி!
பழநி: விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி ஜநூறு மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பாப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நூறு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. மரம் நடும் விழாவிற்கு தலைமையாசிரியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் கர்ணன் முதல் மரக்கன்றை நட்டு பணியினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களும் சேவா டிரஸ்டின் உறுப்பினர்களும் நூறு மரக்கன்றுகளை நட்டு முடித்தனர். வேம்பு, புங்கன், இலுப்பை, புளியன், வாகை, போன்ற மரவகைகள் நடப்பட்டன. மரம் நடும் பணிக்கான ஏற்பாடுகளை ஆசிடணீயர் கதிர்வேல் செய்திருந்தார். பள்ளியின் அனைத்து ஆசிடணீயர்களும் விழாவில் கலந்து கொண்டனர். நடப்பட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமாணீத்து வளர்த்திடவும் மேலும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கும் விவேகானந்தா சேவா டிரஸ்ட் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தேவையான மரக்கன்றுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.