உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்!

தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் (தட்சணயான புண்ணியகாலம்), நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, விநாயகர், சந்திரசேகரர் உண்ணாமுலையம்மன், தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, காலை, 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் சன்னதி எதிரே உள்ள, 72 அடி உயர தங்க கொடிமரத்தில், அதிர்வேட்டு முழங்க கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. அப்போது, கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு, "அரோகரா என பக்தி கோஷமிட்டபடி, ஸ்வாமி தரிசனம் செய்தனர். இவ்விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, தினமும் காலை, மற்றும் இரவு நேரங்களில் விநாயகர், சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில், மேளதாளம் முழங்க பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை, அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !