சேலம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
சேலம்: சேலம், ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். சேலம், அம்மாபேட்டை, சௌண்டம்மன் கோவில் தெருவில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக யாக பூஜை ஜூலை,4ம் தேதி துவங்கி நடந்து வந்தது. இதில், நேற்று முன்தினம், மூன்றாம் கால ஹோமம், மங்கள ஆரத்தி, நான்காம் கால ஹோமம், ஸர்வ திரவ்யா ஹூதி, மஹா பூர்ணாஹூதி, சதுர்வேதம், புஷ்பாஞ்சலி, திராவிட வேதம், கணபதி தாளம், நாடி சந்தானம் ஆகியன நடந்தது. நேற்று காலை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தத்துவாதி ஹோமம், ப்ரஸாஹூதி, ஐந்தாம் கால ஜெயாதி ஹோமம், மஹா பூர்ணாஹூதி, கும்பங்கள் யாக சாலையிலிருந்து புறப்படுதல் ஆகியன நடந்தது. ராஜகோபுரத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சோடஷ அபிஷேக பூஜை, தச தர்சனம், திருக்கல்யாணம், அலங்கார பூஜை, மங்கள ஆரத்தி ஆகியன நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டர்.